அரியலூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்.
அரியலூரில் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தினர், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக,அரியலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு,சங்கத்தின் மாவட்ட செயலாளர் கா.ஆனந்தவேல் தலைமையில் ,சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் சரவணன்,சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர்,சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நம். திரு . ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் வருவாய்த் துறையினரின் பணி சுமையை கருதி,அவர்களுக்குமேம்படுத்தப்பட்டஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும்,
வருவாய்த் துறை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்,கருணை அடிப்படையில் வேலை வழங்க அரசு உத்திரவாதம் வழங்க வேண்டும்,பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும், அரசு ஒப்புதல் அளித்த 564 அலுவலக உதவியாளர் பணிகளை உடனே நிரப்பிடவேண்டும், மூன்றாண்டுகளுக்குமேல் வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், பேரிடர் மேலாண்மை அலகுகளில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனே திரும்ப வழங்கிட வேண்டும், வருவாய்த் துறையில் தனியார் அவுட்சோர்சிங் முறையில் அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.