சென்னையில் ரூம் போட்டு தங்கி ஹெராயின் போதை பொருள் விற்ற அசாம் வாலிபர்கள் 2 பேர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 25 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி ஹெராயின் போதை பொருளை விற்ற அசாம் வாலிபர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மீனம்பாக்கம் மற்றும் பரங்கிமலை போன்ற பகுதிகளில் ஹெராயின் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து, தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் அகஸ்டின் தலைமையிலான போலீசார் மீனம்பாக்கத்தில் தீவிர கண்காணிப்பில் இருந்தபோது, அந்த பகுதியில் ஹெராயின் உட்கொண்ட நிலையில் போதையில் அங்கு வந்த பழைய குற்றவாளி ஒருவனைப் பிடித்து நீ எங்கிருந்து ஹெராயின் வாங்கினாய் என்று விசாரித்த போது, தேனாம்பேட்டையில் செக்யூரிட்டி வேலை வேலை பார்க்கும் முபாரக் அலி(28) என்பவர் மூலம் ஹெராயின் வாங்கியதாக தெரிவித்தான்.
இதனை அடுத்து தனிப்படை போலீசார் தேனாம்பேட்டை சென்று முபாரக் அலியை கைது செய்து, அவன் கொடுத்த தகவலின் பெயரில் எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி ஹெராயின் போதை பொருளை விற்று வந்த மன்சூர் இஸ்லாம் (28) என்றவனையும் கைது செய்து அவனிடமிருந்த 25 கிராம் ஹெராயின் போதை பொருளை கைப்பற்றிய தனிப்படை போலீசார் 2 பேரையும் பரங்கிமலை காவல் நிலைய போலீசாரிடம் . ஒப்படைத்தனர்.
பரங்கிமலை காவல் ஆய்வாளர் பாலன் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.