தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு குருபூஜை விழாவில் கோவை மாநகர மாவட்ட அதிமுக செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே. அர்ஜுனன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, அக்கட்சியின் கோவை மாநகர மாவட்ட கழக செயலாளர் சிங்கை சந்துரு தலைமையில் கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மலர் அஞ்சலியும், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் கோவை மாநகர மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டு, மறைந்த கேப்டன் விஜயகாந்த் திருவுருவ படத்திற்க்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினார்கள். அதை தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பீளமேடு பகுதி கழக செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் ஆதிமுக பகுதி கழக செயலாளர் தம்பு (எ)மெளனசாமி முன்னிலை வகித்தனர்.

மேலும் கோவிந்தராஜ் மாவட்ட கழக துணை செயலாளர்,மாவட்ட அவைத்தலைவர் பொன்னுராஜ்,பொருலாளர் ராகவலிங்கம்,துணை செயலாளர்கள் ஜெயக்குமார், திருமதி கற்பகம் வரவேற்புரை , தலைமை செயற்க்குழு உறுப்பினர்கள் பழனி,கருப்புதுரை,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜனா சுலைமான், மற்றும் தேவராஜ் ஆதிமுக மாவட்ட துணை செயலாளர் துரைசாமி, பீளமேடு பகுதி கழக செயலாளர் உலகநாதன் மற்றும் தேமுதிக பீளமேடு அவைத்தலைவர் சக்திவேல்,துணை செயலாளர்கள் வடிவேல்,முத்தம்மாள்,26 வது வட்டக்கழகம் சிட்டி kராமசந்திரன், சிங்கைபகுதி செயலாளர் அழகர்செந்தில், அவைத்தலைவர் சுரேஷ், கேப்டன் மன்றம் செயலாளர் ராஜகுமாரவேல்,மகளிர் அணி தனலட்சுமி, சந்திரா,கோவை சதீஸ்,நேர்மை சந்திரன்,தாமோதரன் மற்றும் பாக்ஸ் மூர்த்தி மற்றும் அதிமுகா,தேமுதிக முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.