மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கப்பலோட்டிய தமிழன் வா.உ.சிதம்பரம் பிள்ளை 153வது பிறந்தநாள் விழா உசிலை வட்டார பிள்ளைமார் சங்க தலைவர் வக்கீல் ரவிச்சந்திரன் தலைமையில் செயலாளர் வாசிமுத்து பொருளாளர் மகேஸ்வரன் நிர்வாகி வீரமணிகண்டன், மார்க்கண்டன், சிவக்குமார், நாகராஜ், செல்வராஜ் எல்ஐசி. சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னிலையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வ உ சிதம்பரனார் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இனிப்புகள் பெற்றுச் சென்றனர்.