வடகாடு பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 14 பேரில் 13 பேருக்கு 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற உத்தரவு.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 14 பேர்களில் 13 நபர்கள் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள ஒருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 13 பேர் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி பாபுலால் உத்தரவிட்டார். இதை எடுத்து அனைவரும் புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.