மதுரை வில்லாபுரத்தில் உள்ள சங்கவிநாயகர் திருக்கோவிலில் கார்த்திகை மாதம் சோமாவாரம் (திங்கள்கிழமை) சங்க விநாயகர் திருக்கோயிலில் செல்லையா சொர்ணம் அறக்கட்டளை சார்பில் கார்த்திகை மாத சோமவார தினம் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

லிங்க வடிவில் அலங்கரிக்கப்பட்ட 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டது.
முன்னதாக திருக்கோவிலில் அனுக்கை பூஜையுடன் கணபதி ஹோமம் நடைபெற்றது.
பின்னர் உற்சவருக்கு பால் பன்னீர் சந்தனம் தயிர் திருமஞ்சனம் மஞ்சள் உள்ளிட்ட 18 வகை வாசனை திரவியங்கள் அபிஷேகங்கள் செய்யப்பட்டது .

விழாவிற்கான ஏற்பாடுகளை சங்க விநாயகர் திருக்கோயில் அறங்காவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.







; ?>)
; ?>)
; ?>)