இராஜபாளையத்தில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை வெறி நாய் கடித்ததில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி கலை மன்றம், ஜவகர் மைதானம்.
அம்மா உணவகம், சொக்கர் கோவில், எல் ஐ சி கட்டிடம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் நடந்து சென்றவர்கள் என பத்துக்கு மேற்பட்டோரை வெறிநாய் கடித்து காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுக் கொண்டு வீடு திரும்பினர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த இராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் 18வது வார்டு அதிமுக கவுன்சிலர் சோலைமலை இராஜபாளையம் நகர் பகுதிகளில் நாய் தொந்தரவு அதிகமாக உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து பேசினார். அப்பொழுது திமுக கவுன்சிலருக்கும், அதிமுக கவுன்சிலிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து பேசி இரண்டு நாட்களில் தெரு நாய் கடித்து 10 பேர் காயமடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.