கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்தனர்.
கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, பீளமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பீளமேடு கொடிசியா கட்டிடத்திற்கு எதிரே உள்ள சதுரகிரி பேக்கரி பின்புறம் காலியாக உள்ள இடத்தில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதை போலீசார் கண்டு அறிந்தனர். அவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஈரோடு மாவட்டம், துருசம்பாளையம், சின்னக்கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த தர்மதுரை (வயது 35), என்பது தெரியவந்தது.
அவரிடமிருந்து 10.220 கிலோ கஞ்சா மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், தர்மதுரையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.