• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு
விசா வழங்கி சாதனை: அமெரிக்கா

2022-ம் நிதி ஆண்டில் 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி அமெரிக்கா சாதனை படைத்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, அவரிடம் இந்திய சுற்றுலாவாசிகளுக்கு விசாக்களை அனுமதிப்பதில் காலதாமதம் ஏற்படுவது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் பேசும்போது, இந்தியாவில் உள்ள எங்களுடைய தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகள், 2022 ஒற்றை நிதியாண்டில் மாணவர்களுக்கு விசா வழங்கியதில் இதுவரை இல்லாத வகையில் சாதனை படைத்து உள்ளது. இதன்படி, நாங்கள் ஏறக்குறைய 1.25 இந்திய மாணவர்களுக்கு விசா அனுமதி வழங்கி இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார். சில விண்ணப்பதாரர்களின் கோரிக்கையான நீட்டிக்கப்பட்ட விசாக்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது என ஏற்று கொள்கிறோம். விசாக்களை பெறுவதற்கான நேர்காணலுக்கான காத்திருப்பு நேரம் குறைவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் எடுத்து வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். தேச பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்பை மேற்கொள்வதில் நாங்கள் ஈடுபடுவதுடன் நேர்மையான கோரிக்கைகளுடன் கூடிய அமெரிக்கர் அல்லாத நபர்களின் பயண வசதிகளை செய்து வருகிறோம். சரியான தருணத்தில் விசா வழங்குவது என்பது அமெரிக்க பொருளாதாரத்திற்கு முக்கியம் வாய்ந்தது மற்றும் அதுவே நிர்வாகத்தின் இலக்கும் ஆகும் என கூறியுள்ளார்.