• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆன்லைன் மூலம் ஆள் மாறாட்டம்: 3 பேர் கைது

BySeenu

Feb 18, 2025

ஆன்லைன் மூலம் ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்தனர்.

சினிமாவை மிஞ்சும் திரைகதையுடன் மோசடியை அரங்கேற்றியது அம்பலம் !!!

கோவை மாவட்டம் சூலூர், போகம்பட்டி, பகுதியில் வசிக்கும் தினேஷ் குமார், தனது குடும்பத்தினருடன், “சிறுவாணி ஏர் கண்டிஷனிங் சொல்யூஷன்ஸ்” என்ற பெயரில் ஏர் கண்டிஷணர்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 4, 2024 அன்று, காலை 11:00 மணியளவில், சிவகுமார் என்ற மர்ம நபர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் தினேஷ்குமாரை தொடர்பு கொண்டு, தன்னை சிவகுமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளார். மேலும் பிரணவ் ஹார்டுவேர்ஸ் என்ற நிறுவனத்தின் பிரதிநிதி என்று கூறிக் கொண்ட அந்த நபர், ப்ளூ ஸ்டார் ஸ்பிளிட் ஏர் கண்டிஷனரை வாங்க விரும்புவதாகக் கூறி உள்ளார். அதை நம்பிய தினேஷ்குமார் ஏர்கண்டிஷ்ணர் குறித்த விலை மற்றும் விவரங்களை சிவக்குமாருக்கு தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து சிவக்குமார் நிறுவனத்தின் பெயர், ஜி.எஸ்.டி தகவல், யு.டி.ஆர் எண் ஆகியவற்றை தினேஷ்குமாரின் வாட்ஸாப் எண்ணிற்க்கு அனுப்பியதுடன் போலியாக வங்கி கணக்கில் இருந்து பணம் டெபிட் ரசீது போன்ற விவரங்களை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொண்டனர். மேலும் சிறிது நேரத்திற்குப் பிறகு, யுவராஜ் என்ற ரேபிடோ (RAPIDO) டெலிவரி நபர் மதியம் 1:05 மணிக்கு தினேஷ் குமாரின் அலுவலகத்திற்கு வந்து, 72 ஆயிரம் மதிப்பிலான ஏர் கண்டிஷனர்களை சேகரித்து விட்டு மின்னல் வேகத்தில் அங்கு இருந்து சென்றதாக தெரியவருகிறது.பணம் செலுத்தப்பட்டதாக நம்பி, தினேஷ் குமார் பொருட்களை டெலிவரி செய்த நிலையில். பின்னர் அவரது வங்கிக் கணக்கைச் தினேஷ்குமார் சரி பார்த்த போது, ​​பணம் எதுவும் வங்கி கணக்கில் வரவில்லை என்பதையும், அவர் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்தார்.

இதை அடுத்து பாதிக்கப்பட்டவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார். மோசடியில் ஈடுபட்டதாக கோவை உக்கடம் அன்புநகரை சேர்ந்த ஷேக் அப்துல் காதர், கோட்டைமேடு பகுதியை சேர்ந்த முகமதுஅலி மற்றும் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த் மன்சூர்அலி ஆமியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில் மூவரும் ஆள்மாறாட்டம் செய்து ஆன்லைனில் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. மேலும் இவர்கள் மீது. ஏற்கனவே மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளதும் தெரியவந்து உள்ளது. இதை அடுத்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.