வான் புகழ் வள்ளுவரின் சிலையை அகற்ற ஜேசிபி இயந்திரத்தோடு வந்த அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் புனித லூர்து அன்னை பள்ளி வளாகத்தில் உள்ள காம்பவுண்ட் சுவரின் மீது வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை அகற்ற காவல்துறை வருவாய் துறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் குவிந்தனர் கடந்த 22 ஆண்டுகளாக தற்போதைய வள்ளுவர் சிலைக்கு அனுமதி தர மறுத்த நிர்வாகத்தின் போக்குக்கு எதிராக திடீரென்று சில அமைப்பு குழுவினர் நேற்று பீடத்தில் ஏற்றி வைத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திற்கு தொடர் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் விடுத்து வந்தனர். குழுவினர் காவல்துறையின் அராஜகத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அதிகாரிகள் எப்படியாவது திருவள்ளுவர் சிலையை அகற்ற வேண்டும் என்று உறுதியோடு இருப்பதால் சிலை முன்பாக அமர்ந்து காவல் துறை அதிகாரிகளோடு வாக்குவாதத்திலும் சிலை அமைப்புக் குழுவினர் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிலையை அகற்றும் பட்சத்தில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்து வருவதால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.