• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பேய் படங்கள் எடுப்பதற்கு கதை தேவையில்லை .காட்சிகளை வைத்தே படம் எடுக்க முடியுமா? ராகவா லாரன்ஸ் படங்கள் அந்த வரிசையில் வருகிறதா?

Byகுமார்

Aug 7, 2021

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது, சந்திரமுகி 2, ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன் ” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன்
இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் “அதிகாரம்” ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அவருடைய தயாரிப்பில் ஒரு படம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக ராகவேந்திரா லாரன்ஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் காஞ்சனா பெயரில் வெளிவந்த அனைத்துப் படங்களுமே வெற்றிவாகை சூடி ,சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. அந்தப் படங்களின் மூலம் குழந்தைகளாக இருப்பவர்கள் முதல்கொண்டு ,பெரியவர்களையும் குழந்தைகள் மனநிலைக்குக் கொண்டு சென்று ரசிக்கச் செய்த பெருமை ராகவா லாரன்ஸுக்கு உண்டு.

பேய்ப் படங்களின் வித்தியாச முயற்சிகளுக்கு அடித்தளமிட்டவர் ராகவா லாரன்ஸ்.அவர் அடுத்ததாக தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீராகவேந்திரா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் ” துர்கா “.இப்படத்தின் இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

ராகவா லாரன்ஸ் தற்போது ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் ” ருத்ரன் ” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன் இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ” அதிகாரம் ” படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இயக்குநர், நடிகர் நடிகைகள் என எந்தவிதமான தகவல்களும் இல்லாமல் படத்தின் பெயரை மட்டும் அறிவித்ததன் காரணம் என்னவென்று விசாரித்தபோது ,தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் எல்லாம் சம்பளம் வாங்கி நடித்து வரும்படங்கள் .தற்போது ஓடிடி நிறுவனங்களுக்கு இடையே முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை வாங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பிட்ட நடிகர்கள் படங்களை தங்கள் ஓடிடி தளத்திற்கு மட்டுமே கொடுக்கவேண்டும் என்கிற நீண்ட கால ஒப்பந்தங்களை செய்ய தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் அப்படியொரு வாய்ப்பை தனக்கும் உருவாக்கி கொள்ள ராகவா லாரன்ஸ் முயற்சிக்கின்றார் .பொதுவாக பேய் படங்கள் எல்லா காலங்களுக்கும் பொருந்தகூடியவை. கதையே இல்லாமல் காட்சிகளை வைத்து படம் எடுத்துவிடலாம். ஓடிடி தளங்கள் இது போன்ற பேய் படங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் முயற்சிக்கான முன்னோட்டமே”துர்கா” என்கின்றனர்.