• Sat. Jun 14th, 2025
[smartslider3 slider="7"]

பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் தல – தளபதி… திடீர் சந்திப்பு ஏன் தெரியுமா?..

By

Aug 12, 2021

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன்  திலீப்குமார் இயக்கத்தில்  ‘பீஸ்ட்’ படத்தில் நடந்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மலையாள படங்களில், நடித்து பிரபலமான  நடிகர் மற்றும் துணை இயக்குனருமான ஷைன் டாம் சாக்கோ, பிரபல இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினர். தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் உள்ள பிரபல தனியார் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்யை தல தோனி சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான தல தோனி இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். அவர் விஜய்யை சந்தித்து பேசிய புகைப்படங்கள் தாறுமாறாக ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. விளம்பர பட ஷூட்டிங்கிற்காக சென்னை வந்த தோனி, விஜய் ஷூட்டிங் நடக்கும் அதே ஸ்டூடியோவில் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்துள்ளார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசியுள்ளனர். இந்த புகைப்படங்களோடு #ThalapathyVijay
#WhistlePodu, Gokulam Studios ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.