• Fri. Apr 26th, 2024

நடுக்கடலில் மீனவர்களிடையே மோதல்… 4 பேர் படுகாயம்!…

By

Aug 15, 2021

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சுருக்குமடி விவகாரம் தொடர்பாக நடுக்கடலில் இரு கிராமத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழக கடற்கரையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலையான, சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி, மீன்பிடிக்க தடை செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்களிலும் தடைசெய்யப்பட்ட மீன்வலைகளை பயன்படுத்த்தி மீன்பிடிப்பது தொடர்பாக பிரச்சனைகள் வெடித்து வருகின்றன.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தடைகளை மீறி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் படகுகள் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த திருமுல்லைவாசல் சுருக்கு மடி வலை ஆதரவு மீனவர்கள் தங்கள் படகுகளை எடுத்துக்கொண்டு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது நடுக்கடலில் அவர்களை தடுக்க முயன்ற வானகிரி மீனவர்கள் தங்கள் படகுகளை மோதியதாக தெரிகிறது. இதில் வானகிரி மீனவர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த வானகிரி மீனவர்கள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த திருமுல்லைவாசல் மீனவர்களுக்குச் சொந்தமான 4 படகுகளை தீவைத்து கொளுத்தினர். இதுகுறித்து கடலோர காவல்படையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *