

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் வைகை மகளிர் இயக்கம் இணைந்து தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்காண ஆலோசனை கூட்டம், வைகை மகளிர் இயக்க பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் அருண் கலந்துகொண்டு திட்டத்தின் நோக்கம் ,செயல்பாடுகள் தொழில்முனைவோரை அடையாளம் காணுதல், அவர்களை மேம்படுத்துதலில் தொழில் நிறுவனங்களின் பங்கு ஆகியவற்றைக் குறித்து விளக்க உரையாற்றினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கம் ,அடுத்த கட்ட பணிகள் குறித்து நிறுவன மாநில செயலாளர் உமாமகேஸ்வரன் விளக்கமாக எடுத்துரைத்தார். முன்னதாக வைகை மகளிர் இயக்க இயக்குனர் சின்னாண்டி வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனத்தினர் ,திட்ட செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினர். கூட்ட முடிவில் வைகை மகளிர் இயக்க செயலாளர் வீரித்தாய் நன்றி கூறினார்.


