• Wed. Feb 19th, 2025

திமுக வெள்ளை அறிக்கை எதிரொலி..,

By

Aug 10, 2021

தேசத்தந்தை உருவத்தோடு கடன் அடைக்க வந்த இளைஞன்! தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் சுமை உள்ளது என நேற்று தான் நிதி அமைச்சர் சொன்னார்.


இதோ என் குடும்பத்தின் தலையிலுள்ள கடனை நான் வழங்க முன் வருகிறேன் என நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர் தமிழக இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில் செயல்பட்டுள்ளார் நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு காந்தியவாதி இளைஞர்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அரசு நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இதில் தமிழக அரசுக்கு ரூ. ஐந்து லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் சுமை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் அருகே மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்த காந்தியவாதி இளைஞரான ரமேஷ் தியாகராஜன் என்பவர் ரூ.2.63 லட்சம் கடன் தொகைக்குரிய காசோலை அடங்கிய அட்டையை தயார் செய்து நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று காசோலை வழங்கிய நிகழ்வை அவரே அரசியல்டுடே யூடியூப் சேனலுக்காக பகிர்ந்துள்ளார் அதை கேட்போம்.


தமிழ் தாயின் திருமகனாய் தமிழ்நாட்டில் அவதரித்த ஒவ்வொரு தலை மகனுக்கும் தமிழ் நாட்டின் மீதும் அதன் வளர்ச்சியின் மீதும் அக்கறை இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் தன்னுடைய முதலடியை எடுத்து வைத்திருக்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த இந்த காந்தியவாதி இளைஞர் ரமேஷ்.