தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற தவறி வரும் திமுக அரசை கண்டித்தும், அதிமுகவினர் மீதும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதும் வழக்கு போடுவதாக கூறி மிரட்டும் வரும் செயலை கைவிட வேண்டும் என கூறி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் கன்னியாகுமரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தனது வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக அரசு தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை எனக்கூறி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தங்கள் வீடுகளின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அதிமுக அமைப்பு செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தனது வீட்டு முன்பு பதாகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.ஆர்ப்பாட்டத்தின்போது ” நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அதற்கு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பதாக கூறி தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு தற்போது அது குறித்து எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, இதே போன்று பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தரப்படும் என அறிவித்துவிட்டு இதுவரை வழங்கவில்லை, அதே போல்அதிமுகவினரை மிரட்டும் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இதில் வட்டார அதிமுக நிர்வாகிகளும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.