

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்க தாகம் தீர்த்த தங்க மகன் யார் எனில் ஈட்டி எறிதல் போட்டியில் வென்ற நீரஜ் சோப்ரா தான். அரியானா மாநிலம் பானிப்பட் நகரத்தைச் சேர்ந்த நீரஜ் ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றுகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அவர் ஈட்டி எறியும் போட்டியில் 86.65 மீட்டர் நீளத்திற்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.


