தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த காளத்திமடத்தை சேர்ந்தவர் முருகன் (56). இவர் ஊருக்கு வெளியே அம்பாசமுத்திரம் சாலையில் காளத்திமடம் கோவில் அருகே பழைய பொருட்கள் கடை நடத்தி வருகின்றார். முருகன் மனைவி பாப்பா (52). பேரக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடைக்கு வந்திருந்தார். மாலை 5.30 மணியளவில் கடையில் இருந்து வீட்டிற்கு நடந்து போகும்போது மர்ம நபர் பாப்பா அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார்.
செயினை பிடித்துக்கொண்டு பாப்பா சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு காளத்தி மடம் பஸ் நிறுத்தத்தில் இருந்தவர்கள் பக்கத்து கடைக்காரர்கள் திரண்டு
வந்து செயின் திருடனை கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து செயின் திருடனை இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கடையம் போலீசார் திருடனை விசாரித்த போது அவர் மருதம்புத்தூரைச் சேர்ந்த அருண்பாண்டியன் என தெரியவந்தது. இதனையடுத்து அருண்பாண்டியன் கைது செய்யப்பட்டார்.