கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரிநாராயணன் ஐ.பி.எஸ் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று குளச்சல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அருள் பிரகாஷ், வி.கே பி மேல்நிலைபள்ளி பகுதியில் ரோந்து சென்ற போது, சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் குளச்சல், குழிவிளை பகுதியை சேர்ந்த காட்வின் (வயது 20) மற்றும் ஜெனிஷ் மோன் (வயது 21) என்பது தெரியவந்தது. மேலும் இருவரிடமும் தீவிர விசாரணை செய்த போது, அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்த 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.