மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். செல்வராகவன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் தலைப்பான பீஸ்ட் என்பதை மாற்ற படக்குழு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூன் 21ம் தேதி ‘விஜய் 65’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ‘பீஸ்ட்’ என்ற தலைப்போடு வெளியானது முதலே பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக அஜித் ரசிகர்கள் “பார்த்தியா எங்க தல எப்படி ‘வலிமை’-ன்னு தமிழில் நச்சுன்னு தலைப்பு வச்சியிருக்காரு. அது என்னடா டைட்டில் ‘பீஸ்ட்’ன்னு ஒரு தலைப்பு.. என தளபதி ரசிகர்களை சோசியல் மீடியாவில் வம்பிழுத்தனர். மேலும் பிகில், மெர்சல் வரிசையில் பீஸ்ட் பட தலைப்பும் தமிழில் இல்லாததது விஜய் ரசிகர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
தமிழக அரசு விரைவில், தமிழ் திரைப்படங்களுக்கான 8 சதவீத வரியை தள்ளுபடி செய்ய உள்ளதாம். தமிழில் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு மட்டுமே இந்த வரிச்சலுகை வழங்கப்படும் என்றும் நிபந்தனை வைக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில் படத்தின் தலைப்பை தமிழில் மாற்றிவிடலாமா? என படக்குழு யோசித்து வருகிறார்களாம். இதனால், ஆங்கிலத்தில், பீஸ்ட் என தலைப்பு வைத்திருக்கும் படக்குழு விரைவில், பீஸ்ட் எனும் தலைப்பை மாற்ற பெரிதும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த படத்தை தயாரித்து வருவது சன் பிக்சர்ஸ் நிறுவனம், திமுக ஆட்சி காலத்தில் இப்படி அவர்களது நெருங்கிய உறவினர்களின் தயாரிப்பு நிறுவனமே தமிழில் பெயர் வைக்காமல் இருக்கலாம் என்ற விமர்சனங்களும் எழுந்தது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் பீஸ்ட் பட தலைப்பை மாற்ற ஆலோசனை நடப்பதாக தெரிகிறது.