


காரைக்குடி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகர்நோன்பு திடல் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். (40) மர வியாபாரியான இவர் , அவரது நண்பர் மூர்த்தி என்பவருடன், காரைக்குடியிலிருந்து ஓ.சிறுவயல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை குறுக்காக கடக்க முயன்ற பொழுது, திருச்சியில் இருந்து வந்த கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த கார்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த மூர்த்தி படுகாயங்களுடன் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


