• Sat. Mar 28th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே இளம் பெண் உயிர் இழப்பு., உறவினர்கள் புகார்..,

ByS.Ariyanayagam

Mar 28, 2026

சின்னாளபட்டி தனியார் மருத்துவமனையில் இளம் பெண் உயிரிழப்பு – தவறான சிகிச்சையில் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, பூஞ்சோலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சந்தோஷ்குமார் மனைவி மோகனப்பிரியா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த மோகனப்பிரியாவின் கணவர் சந்தோஷ் குமார் மற்றும் உறவினர்கள் மோகனப்பிரியாவின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்றும் தவறான சிகிச்சை அளித்ததாகவும் குற்றம் சாட்டி சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சின்னாளப்பட்டி காவல்துறையினர் மோகனப்பிரியாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.