• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வாரிசு அரசியலை ஏற்றுக் கொள்ள மாட்டோம்..,

ByP.Thangapandi

Nov 14, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர், உசிலம்பட்டி, ஜோதில்நாயக்கணூர் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்ஐஆர் குறித்த அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.,

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயக்குமார்.,

திமுகவின் வழித்தோன்றல் இளவரசராக வருங்காலத்தில் திமுகவை எந்த பாதையில் வழிநடத்த போகிறார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, அதே சாக்கடையாக இன்று அரசியலில் விமர்சனம் என்ற பெயரில் சாக்கடை அரசியலை, நய்யாண்டி, நக்கல்கள், ஆணவம் அதிகார மமதையில் இன்று உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார்.,

ஆட்சி அதிகாரத்தில் இருப்பதினாலும், துணை முதல்வர் அவர்கள் பாரம்பரியத்தை நிரூபித்து காட்டுகின்ற வகையில் பச்சை பச்சையாக பொய் பேசி படம் பிடித்து காட்டி வருகிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.,

அவரிடத்தில் என்ன நாகரீகத்தை எதிர்பார்க்க முடியும் என்று தெரியவில்லை, அதிகார மமதையில் இருக்க கூடிய நீங்கள் இன்று பேச்செல்லாம் மிகவும் கண்டனத்துக்கு உரியது.,

இரண்டு நாட்கள் சிவகங்கைக்கு ஆய்வுக்காகவும், மக்கள் பணிக்கும் வருகிறார்கள்.,

திணிக்கப்பட்ட தலைவராக ஆட்சியிலும் சரி கட்சியிலும் சரி இன்று எந்த விதமான உழைப்பும் இல்லாமல், கருணாநிதிக்கு பேரனாகவும், ஸ்டாலினுக்கு மகனாகவும் பிறந்த ஆணவத்தில், அதிகார மமதையில் பேசுகிற பேச்சு, விமர்சனங்கள் கோடான கோடி தொண்டர்களை இன்று மனம் வேதனை அடைய செய்திருக்கிறது.,

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும், இளைஞர்களும், மகளீர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது, தமிழ்நாட்டை கருணாநிதியின் ஒரு குடும்பத்திற்கு சொந்தமாக்கிய காரணத்தினால் தான் இன்று ஆணவத்தின் அதிகார மமதையில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.,

மன்னராட்சியில் இளவரசராக முடி சூடியுள்ள மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சிந்தித்து வார்த்தைகளை வெளியிட வேண்டும், மக்களுக்காக காவேரி பிரச்சனையில், முல்லை பெரியாறு பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனையில், இன்று நடைபெறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையெல்லாம் கண்டித்து, பாலியல் வண்கொடுமை, விலைவாசி உயர்வைக் கண்டித்து, கடன் அதிகரிப்பதைக் கண்டித்து தினந்தோறும் உரிமைக்குரல் எழுப்பி கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நீங்கள் எதுகை மோனையில் பேசுவது ஏற்புடையது அல்ல, உங்களை விட எதுகை மோனையில் எங்களுக்கும் விமர்சிக்க தெரியும், ஆனால் அம்மா அவர்கள் அதிமுக பொதுக்கூட்டங்களுக்கும், எங்கள் கூட்டங்களுக்கும் அதிகமாக பெண்கள் வருவார்கள் என்கிற காரணத்தினால் அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்., ஆனால் நீங்கள் உங்கள் தாத்தா, தந்தை வழியில் அரசியல் அநாகரிகத்தின் உச்சமாக நீங்கள் விமர்சிப்பதை நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை கண்டனமாக தெரிவித்துக் கொள்கிறோம்.,

ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு சிந்தித்து மன்னராட்சிக்கு முடிவுரை எழுதி, மக்களாட்சி மலர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் இன்று பீகாரில் ஒரு குடும்பத்தின் வாரிசு அரசியலை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்கிற அந்த தீர்ப்பு நமக்கு மிக பெரிய ஆதரவு அளிப்பதாக இருக்கிறது.,

மக்களாட்சி மலரும் என்ற நம்பிக்கைக்கு உயிரூட்டுவதாக பீகார் மாநிலத்தின் தேர்தல் அறிவிப்பு வந்து கொண்டிருக்கிறது., இன்னும் முழுமையாக முடிவு தெரியவில்லை அது குறித்து முழுமையாக எங்கள் பொதுச்செயலாளர் அறிக்கையாக சொல்வார்கள்.,

மன்னராட்சிக்கு முடிவுரை எழுதி மக்களாட்சி தமிழகத்தில் மலருவதற்கு அச்சாரமாக பீகாரில் மக்களாட்சி மலர்ந்திருக்கிறது என்ற நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.,

மேததாகு அணை குறித்த கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்,செயல்படாத அரசாக முடங்கி கிடக்கும் அரசாக திமுக அரசு நமது உரிமையை பறிகொடுத்து விடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.,

நீர்வளத்துறை அமைச்சரும், வழக்கறிஞரும் பதில் சொல்லியிருக்கிறார்கள், நமக்கு தேவை பதில் அல்ல நடவடிக்கை, நமது உரிமையை யாருக்காகவும், எதற்காகவும், விட்டுக் கொடுக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும்., மேததாது அணை அமையும் என்று சொன்னால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும், அந்த அபாயத்தை உணர்ந்து இந்த அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களுடைய விவசாயிகளுடைய எதிர்பார்ப்பு., அந்த நம்பிக்கையை நிறைவேற்றுவார்கள் என்று தான் எடப்பாடியார் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்., இனிமேலாவது இந்த அரசு விழிப்போடு இருக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு என பேட்டியளித்தார்.,