இந்திய சுதந்திர போராட்டத்தில் 9_ஆண்டுகள் சிறை வாசம். சுதந்திர இந்தியாவில். தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த காலத்தில். தமிழகத்தில் பள்ளிகளே இல்லாத கிராமங்களை உருவாக்கியது. தமிழகத்தில் கட்டிய அணைகளின் வரிசை. தமிழகத்தின் நெய்வேலி நிலக்கரியி சுரங்க தொழிற்சாலை, திருச்சியில் பெல் தொழிற்சாலை. பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம். என தமிழகத்தில் காமராஜர் செய்த ஆட்சியின் சாதனைகள்.
காங்கிரஸ் கட்சியில் “கே” திட்டம் என புதிய பரிணாமத்தை,அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு வின் திட்டமான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அவர்கள் அரசில் வகிக்கும் பதவிகளை விட்டு . காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்க முன் வரவேண்டும் என்ற அழைப்பை ஏற்று. காமராஜர் தமிழகத்தின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கட்சி பணிக்கு சென்றவர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இரண்டு முறையும். காங்கிரஸ் தலைவராக இருந்த போது இரண்டு பிரதமர்களை தேர்வு செய்தவர் என்ற பெருமை மிகுந்த தலைவராக காமராஜரின் சாதனைகள்.
குமரி மாவட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் விவசாய நீர் பாசனம்,குடி நீர் என்ற மூன்று பணிகளை மேல் கோதையார், கீழ் கோதையார் திட்டத்தின் மூலம் இரண்டு மலைகளுக்கு இடையே ஆன மாத்தூர் தொட்டி பாலம். காமராஜர் ஆட்சியில் குமரி மாவட்டத்தில் உரு பெற்ற மக்கள் திட்டம்.
குமரி தொழிற்சாலையே இல்லாத மாவட்டமாக இன்று வரை தொடரும் நிலையில். தமிழக முதல்வராக காமராஜர் இருந்த போது ரப்பர் தொழிற்சாலையை உருவாக்கிய ஒற்றை தொழிற்சாலை.
அன்றைய நாகர்கோவில் மக்களவை உறுப்பினராக இருந்த குமரி தந்தை மார்சல் நேசமணியின் மறைவுக்கு பின் 1969_இடைத்தேர்தலில்,1971_பொது தேர்தலில் பெரும் தலைவர் காமராஜர் போட்டி இட்டு மகத்தான வெற்றி பெற்றார்.
தமிழகம் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் காமராஜர் என்றே பெரும் தலைவரை அடையாளம் படுத்தும் நிலையில். குமரி மாவட்டத்தில் பெரும் தலைவரை “அப்பச்சி” என்று உரிமையோடு அடையாளப்படுத்தியது குமரி மாவட்ட மக்கள் மட்டுமே. குமரி மக்களின் வாழ்வியலில். காமராஜரை தங்கள் குடும்ப உறுப்பினர் என உரிமை சொந்தம் என கொண்டாடும் நிலையில், கன்னியாகுமரியில் பெரும் தலைவர் நினைவை போற்றும் வகையில். சுதந்திர போராட்ட தியாகி, தமிழகத்தில் 9_ஆண்டு முதலமைச்சர், தமிழகத்தில் கல்வி கண் திறந்தார் என்ற பெருமை மிகுந்த தமிழனை போற்றும் வகையில் அந்த மாபெரும் தலைவனுக்கு “நன்றி”தெரிவிக்கும் வகையில். மத்திய அரசு, இந்தியாவின் தென் எல்லை என்பதை கடந்து காமராஜர் இரண்டு முறை நாகர்கோவில் மக்களவை உறுப்பினராக இருந்தவர் என்ற பெருமை மிகுந்த தலைவர் காமராஜருக்கு புகழ் சேர்க்கும் வகையில் இந்தியாவின் ஒன்றிய அரசு திட்டம் இட்டு. கன்னியாகுமரியில் காமராஜருக்கு 1000_அடி உயரம் சிலை வைக்க வேண்டும் என இன்றைய கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
