குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 38 வது வார்டு பகுதியில் சோலார் மின்விளக்கு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை ஏற்று ரூபாய் 7,50,000 ஒதுக்கப்பட்டு அதற்கான பணி முடிவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சோலார் மின் விளக்கை திறந்து வைத்தார். இதே போல் தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட வீரநாராயணமங்கலம் பகுதியில் சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டது. மேலும் மறவன்குடியிருப்பு, மேலகிருஷ்ணன் புதூர் பகுதியிலும் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அமைக்க பட்ட சோலார் மின்விளக்குகளையும் விஜய் வசந்த் எம்பி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், மாமன்ற உறுப்பினர்கள் அனுஷா பிரைட், சுப்பிரமணியன், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவக்குமார், வட்டாரத் தலைவர்கள் முருகானந்தம், அசோக்ராஜ், நாகர்கோவில் மாநகர மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சோனிவிதுலா, தாழக்குடி பேரூராட்சி தலைவர் சிவகுமார், துணை தலைவர் S. N ராஜா, வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
