SIR க்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டம் அனைவரும் கலந்து கொண்டு எதிர்ப்பை பதிவு செய்ய விஜய் வசந்த் எம்.பி அழைப்பு தீவிர வாக்கு திருத்தம் என்ற பெயரில் இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் திட்டமிட்ட திருத்தங்கள், வாக்குப் பெயர் நீக்கல்கள், மற்றும் வாக்காளர்களின் உரிமை மீதான அத்துமீறல்களை

தமிழகத்தில் செயல்படுத்துவதை கண்டித்து ஒருங்கிணைந்த குமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் நாளை (17-11-2025) நாகர்கோவிலில் மாலை 4 மணிக்கு தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற இருக்கும் மாபெரும் ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மகளிர் பெருந்திரளாக கூடி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அழைப்பு விடுத்துள்ளார்.






; ?>)
; ?>)
; ?>)
