தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் -ன் பிறந்தநாள் விழா நவம்பர் 27ஆம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அதிக அளவில் விளையாட்டு வீரர்களை ஏற்படுத்த வேண்டும் என்ற துணை முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தும் விதமாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி துவங்கியது.

15 வயதுக்கு உட்பட்ட ஆண் பெண் ஒற்றையர் பிரிவு, 19 வயதுக்கு உட்பட்ட ஆண் பெண் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு பிரிவினர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் 170 க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த போட்டியை கழக அமைப்பு துணைச் செயலாளர் ஆஸ்டின் துவங்கி வைத்தார். இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
