நாகர்கோவிலில் செல்லும் சாலையில் வெள்ளமடம் விலக்கு திருப்பம் சகாயநகர்
திருப்பத்தில் பல்லாண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டு இருந்த ராஜீவ் காந்தி சிலை உடைந்து கிடந்ததாலும், அருகே உள்ள கடையும் சேதமடைந்து இருந்ததால் பரபரப்பு. ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் அன்பு பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதல் கட்ட விசாரணை நடத்தியதில்,
நள்ளிரவில் கனரக வாகனம் மோதி இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது எனவும், மேலும் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இடித்த கனரக வாகனம் பற்றி தெரியவரும் எனவும் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளமடம் சகாயநகர் விலக்கு அருகே சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலை உடைப்பு




