கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா 8 ம் நாள் விழாவில், அன்னையின் அருள் என்ற தலைப்பில் மனம் நெகிழும் ஆன்மீக பக்தி சொற்பொழிவாற்றினார். கலை மாமணி தேச மங்கையர்க்கரசி.

திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகள் மாணவி கலை மாமணி தேசமங்கையர்கரசி அவர்களை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் குமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டிபன், திமுக அணிகளின் துணை அமைப்பாளர் , ஆன்மிக சொற்பொழிவாளர் மதன்குமார், திருமுறை பேரவை செயலாளர் பன்னீர்செல்வம், வட்ட பிரதிநிதிகள் மால்டன் ஜினின், சுகந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி ரதவீதிகள் முழுமையாக சுத்தப்படுத்தி தயார் நிலையில் வைத்துள்ளது. கன்னியாகுமரி நகராட்சியாக மாற்றப்பட்ட பின் வரும் முதல் தேரோட்டம் என்ற நிலையில் சிறப்பான ஏற்பாடுகளை.17_வது வார்ட் உறுப்பினர் ஆனி ரோஸ் தாமஸ் தனிக்கவனம் மேற்கொண்டார். நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆலோசனை மேற்கொண்டார்.






