துறையூர் பகுதிகளில் இரட்டை சகோதரர்கள் 6,7 ம் படிக்கும் சிறுமிகளை பலமுறை பாலியல் தொந்தரவு செய்ததாக இருவர் கைது, முசிறி மகளிர் காவல் ஆய்வாளர் வாணி நடவடிக்கை எடுத்தனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதிகளில் ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும்
மாணவிகள் பள்ளி ஆசிரியரிடம் தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து கூறியதை தொடர்ந்து ஆசிரியர் பெற்றோர்களை அழைத்து சிறுமிகளின் நிலை குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
பெற்றோர்கள் இரு சிறுமிகளை விசாரணை செய்ததில் இரு சிறுமிகளை துறையூர் பகுதிகளை சேர்ந்த கூலி தொழில் செய்யும் இரட்டை(Twins) சகோதரர்கள் ஹரிஷ் (25), ஹரிஹரன் (25) ஆகிய இருவரும் இணைந்து இரு சிறுமிகளிடம் பலமுறை பாலியல் தொந்தரவு செய்ததாக பெற்றோர்கள் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வளர்மதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் வாணி தம்பி ஹரிஷ் அண்ணன் ஹரிஹரன் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்கள், இரட்டை சகோதரர்கள் இணைந்து அப்பகுதி சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.