• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சுனாமியும், கன்னியாகுமரியும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காலை 9.15 மணி அளவில் கடலில் இதுவரை காணாத பேரலை கூட்டங்கள் ஆக்ரோசமாக மலை அளவு உயர்ந்த அலைக்கூட்டங்கள் கரையில் மோதிய வேகத்தில் கன்னியாகுமரி கடலில் உயர்ந்த அலை கூட்டம் திருவள்ளுவர் சிலையின் தலைக்கு மேல் உயரம் வரை எழுந்தது. ஆனால் அந்த அலைகள் எல்லாம் திருவள்ளுவர் தலையை தொட்டு விட்டோம் என்ற புதிய சரித்திரம் படைத்தாலும், 15 முதல் 18_ நிமிடங்கள் கடலில் நர்த்தனம் ஆடிய ஆலைகள் கன்னியாகுமரி, மேலமணக்குடி, கீழமணக்குடி மீனவ கிராமங்களுக்குள் வேகம் எடுத்த மாத்திரத்தில் சிலர் அந்த பகுதியில் இருந்த பனை மரங்களின் உச்சிக்கு உயர்த்தியதில், ஒரு பெண் பனை மரத்தின் கொண்டை பகுதியில் சிக்கியவர் தண்ணீர் வடியும் வரை பனை மரத்தின் உச்சியில் இருந்து உயிர் பிழைத்தார்.

கன்னியாகுமரி, மேலமணக்குடி, கீழ மணக்குடி, கொட்டில்பாடு, குளச்சல் என்ற மீனவர்களின் புகுந்த அலைகூட்டத்தால் பால் குடிக்கும் குழந்தை முதல் முதியோர் வரை உயிரிழந்தனர்.

சுனாமியால் குமரி மாவட்டத்தில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1142. சுனாமி என்னும் பேரலை பாதிப்பு என்பது 20_ வருடங்களை கடந்த பின்னும் அதன் தடங்கள் இன்னும் அழியவில்லை.

சுனாமி தினத்தின் 20_ ஆண்டு நினைவு தினத்தில், கன்னியாகுமரியில் உள்ள சுனாமி நினைவு சின்னத்திற்கு தமிழக அரசின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, குமரி ஆட்சியர் அழகு மீனா, முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், பாஜகவின் சார்பில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலமணக்குடியில்,கொட்டில்பாடு ஆகிய மீனவர்கள் கிராமங்களில் சுனாமியால் மறைந்தார்கள் நினைவாக இன்றும் காலை தேவாலயங்களில் திருப்பலிக்குப்பின், ஒட்டு மொத்த மீனவ கிராமங்களில் குடியிருப்பவர்கள் சுனாமியால் மரணம் அடைந்தவர்களின் பூத உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தில் மறைந்தவர்களுக்கா பிராத்தனை மேற் கொண்டனர்.

குளச்சல் காணிக்கை மாதா கோயில் முற்றத்தில். அந்த பகுதியை சேர்ந்த மரணம் அடைந்த 150_ பேர்களின் உடல் ஒரே பெரிய குழியில், ஒன்றாக அன்றைய குமரி கோட்டார் மறைமாவட்ட ஆயர் தர்மராஜ் பிரார்த்தனைக்கு பின் நல்லடக்கம் செய்த அந்த சோகத்தில் நினைவுகள் 20_ஆண்டை கடக்கும், இன்று கூட குமரி மக்களின் மனதை விட்டு அகலாத நினைவுகளாக தொடர்கிறது.