• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருச்செங்கோடு நாடார் சமுதாய மாணவ, மாணவர்களுக்கு கல்வி பரிசளிப்பு விழா

ByNamakkal Anjaneyar

Jul 22, 2024

திருச்செங்கோடு அருகே கருமாபுரம் சான்றோர் குல நாடார் குரு மடம் சார்பில்,  10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொது தேர்வில்  அதிக மதிப்பெண்கள் பெற்ற நாடார் சமுதாய மாணவ, மாணவர்களுக்கு கல்வி பரிசளிப்பு விழா அறங்காவலர் சுந்தரராஜன் தலைமையில்  நடந்தது. குலகுரு ஸ்ரீமது ஆண்ட சிவசுப்ரமண்ய பண்டித குரு சுவாமிகள் அருளாசியுரை  வழங்கினார். இதில் 120 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சுந்தரராஜன் பேசியதாவது..,

நாடார் சமுதாய பள்ளி அளவிலான மாணவ, மாணவியர் வாழ்வில் முன்னேற்றம் காண எங்களது குருமடம் சார்பில் சான்றிதழ்கள், நினைவுப்பரிசு வழங்கி ஊக்குவிப்பதுடன், கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஏழை மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கி ஆதரவு செய்து வருகிறோம். இதனை பயன்படுத்தி மாணவ, மாணவியர் நன்கு படித்து வாழ்வில் வளம் பெற வேண்டும் என அவர் பேசினார்.

இதில் அமைப்பின் தலைவர் நடேசன், துணை செயலர் தியாகராஜன், தமிழாசிரியர் வேல்முருகன், நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தலைவர்கள் சக்திவேல், ராமசாமி, மேற்கு மாவட்ட செயலர் தனபால், தொழிலதிபர் கருப்பசாமி, உள்பட பலரும் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.