கொடைக்கானலில் மரம் லாரியில் கடத்தல் தெரிந்தும் வனத்துறை அதிகாரிகள் ஆதரவால் தினம்தோறும் லாரி லாரியாக மரம் கடத்தலால் கீழ் மலை பகுதி அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகம் வத்தலகுண்டு வனச்சரகம் கொடைக்கானல் கீழ் மலை பகுதிகளில் தினம்தோறும் வெட்டப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும். அரிய வகை மரங்கள் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக ஒரு மரக்கன்று கூட நடவு செய்யாத மரக் கொள்ளையர்கள் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கண்டும் காணாமல் ஆசீர்வாதம் மட்டும் செய்யும் வனத்துறை அதிகாரிகளால் வளம் அழிந்து வருகிறது.
அழிந்து வரும் கொடைக்கானல் கீழ் மலை பகுதியான காமனூர். தாண்டிகுடி. பண்ணைக்காடு மற்றும் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பன்றிமலை.சோலை காடு.கொங்கு பட்டி .ஆடலூர் .மணலூர்.பெரும்பாறை உள்ளிட்ட கீழ் மலை பகுதிகளில் தொடர்ந்து மரம் வெட்டுவதால் இயற்கை அழிந்து வருகின்றன. மட்டுமல்லாமல் தினந்தோறும் பல்வேறு புதிய புதிய கட்டுமான பணிகளும் வனத்துறை வருவாய்த்துறை ஊராட்சி அதிகாரிகள் ஆதரவோடு துவங்கி உள்ளது.
அழிவின் விளிம்பில் தற்போது கீழ் மலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றன. தடுத்து நிறுத்துவார்களா மாவட்ட நிர்வாகத்தினர் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.