திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சாமி கோவில்.தமிழகத்தில் பல மாவட்டங்களில் எழுப்பப்பட்டுள்ளது போல், இந்தியாவின் தொன் கோடி கன்னியாகுமரியில் கடற்கரை ஓரம் எழுப்பப்பட்டு.திருப்பதியில் உள்ள பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்தமூன்று நாட்கள் “பவித்ரோற்சவம்”நடை பெற்றதில்,நிறைவு பூஜை (நவம்பர்_25)ம் தேதி இரவு 8.30 மணி அளவில் நிறைவு பெற்றது. உள்ளூர் மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுலா பயணிகள் என ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை திருப்பதி தேவஸ்தான உள்ளுர் கமிட்டி தலைவர் சேகர் ரெட்டி செய்தியாளர்களிடம்,
கொரோனோவுக்கு பின் இப்போது திருப்தி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு தினம் லட்ச கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். தரிசனம் முன் பதிவு கட்டணம் ரூ.300என்பதை உயர்த்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. இலவச தர்ம தரிசனத்திற்கு தான் அதிகம் முக்கியத்துவத்தை நிர்வாகம் கொடுக்கிறது.
கன்னியாகுமரியில் கடந்த மூன்று நாட்களாக பவித்ரோற்சவம் நடந்து வந்தது இன்று (நவம்பர்25)இரவு 8 மணி அளவில் நிறைவு பெற்றது. கடந்த மூன்று நாட்களாக தினசரி 3000க்கும் அதிகமான மக்கள் சுவாமி தரிசனம் செய்தார்கள். பக்தர்கள் அனைவருக்கும்.காலை,மதியம்,இரவு உணவு இலவசமாக வழங்கப்பட்டது.
திருப்பதியில் உள்ளது போல் கன்னியாகுமரி கோவிலிலும் தனியார் திருமணம் அனுமதிக்கப்படுகிறது. அனைத்து வசதிகளுடன் வாடகை ரூ.3000.00 மட்டுமே. இதுவரை மூன்று கல்யாணங்கள் நடந்துள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு அதிகமாக தெரிவிக்க உள்ளோம்.

ஜனவரி மாதம் முதல் தினசரி “லட்டு”விற்பனை தொடங்க உள்ளது, இதற்காக திருப்பதியில் இருந்து 5000_ம் லட்டுகள் கொண்டு வந்து லட்டு ஒன்று ரூ.50.00க்கு விற்பனை செய்யப்படும்.
கன்னியாகுமரி வெங்கடேஸ்வரா திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தேவஸ்தானமே பேருந்து இயக்கம் திட்டம் பரிசிலையில் உள்ளது. உடனடி ஏற்பாடாக தமிழக அரசு போக்குவரத்து பேருந்துகள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திக்க இருக்கிறோம் என சேகர் ரெட்டி தெரிவித்தார்.









