கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடலில் எடுத்த புனித நீர் கலசங்களை வைத்து பூஜை செய்த பின் பெண்கள் புனித நீர் கலசங்களை சுமந்துக் கொண்டு 41 _ கிலோமீட்டர் தூரம் ரதத்தின் பின் நடந்து சென்று காளிமலக்கு செல்லும் செயல் கடந்த 21_ ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது.
கன்னியாகுமரி கடலில் எடுத்த புனித நீர் கொண்டு காளிமலை பத்திரகாளி அம்மனுக்கு அபிசேகம் செய்யப்படுகிறது.


ரதத்தில் இருந்த பத்ரகாளி அம்மனுக்கு நடந்த பூஜையில். குமரி மக்களவை முன்னாள் உறுப்பினர் பொன். ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, நாகர்கோவில் மாநகராட்சி வார்டு பாஜக உறுப்பினர் முத்துராமன், குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ், இந்து முன்னணி மாநில பேச்சாளர் எஸ்.பி.அசோகன், ஆகியோர் இந்த ரதயாத்திரை துவக்க நிகழ்வில் பங்கேற்றனர்.



பொன். ராதாகிருஷ்ணன் காவிகொடியை அசைத்து தொடங்கி வைத்தார். ரதத்தின் முன் உயர்ந்த கம்பத்தில் காவிகொடியை நாகர்கோவில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் முத்துராமன் பிடித்தவண்ணம் ரதயாத்திரை பாதையில் சென்றார். பக்தர்கள் உடன் நடந்து சென்றனர்.

ரதயாத் திரையின் பயணம் தூரம் வரை காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.