• Sat. Mar 28th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த த. வெ. க கழகத்தின் பெண் நிர்வாகிகள்..,

BySeenu

Mar 28, 2026

தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகளை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் கட்சியின் மகளிரணியினர் கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தனர்.

அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பலரது கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேரடியாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மகளிர் அணி சார்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கோவையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்சியின் கோவை தெற்கு மாவட்டம் மற்றும் புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் மகளிர் அணியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.

இதேபோன்று கோவை மாநகர் மாவட்ட தவெக மகளிரணி சார்பில் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கட்சியின் மகளிர் அணியினர் தமிழக தமிழக பெண்கள் தாளகா தலைவர் விஜயை ஒரு சகோதரராகவும் தங்கள் மகனாகவும் பார்ப்பதாகவும் ஒரு சில பெண்கள் அவர் மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடான கருத்துக்கள் சிலவற்றை பேசுவதாகவும் ஆனால் அவற்றையெல்லாம் கொச்சைப்படுத்தும் விதமாக மிகவும் தரம் தாழ்ந்த ஒரு விமர்சனத்தை அரசியல் விமர்சகர் பொன்ராஜ் வைத்துள்ளது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்றனர். மேலும் தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தால் எந்த விதமான ஆர்ப்பாட்டங்களோ போராட்டங்களோ செய்யவில்லை எனவும் அவரது இந்த கருத்துக்களுக்கு தேர்தலில் தமிழக மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் தெரிவித்தனர்..