• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இயேசுபிரான் சீடர்களின் பாதங்களைக் கழுவும் புனித சடங்கு..,

ByR. Vijay

Apr 18, 2025

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் கீழ்த்திசை நாடுகளில் லூர்து நகரம் என அழைக்கப்படும் பெருமைக்குரியதாகும். இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் பேராலயத்தில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இயேசுபிரான் பங்கேற்ற கடைசி இரவு விருந்து நிகழ்ச்சி பேராலய கலையரங்கத்தில் நடைபெற்றது பெரிய வியாழன் என்று அழைக்கப்படும். இந்நிகழ்ச்சியில் இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவும் சடங்கு இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பேராலய அதிபர் இருதயராஜ் சீடர்கள் போன்று உடையணிந்து தொண்டர்களின் பாதங்களைக் கழுவினார். அதனைத் தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடைபெற்றது நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.