• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

போலி துப்பாக்கியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நபரால் பரபரப்பு.

BySeenu

Feb 12, 2024

ஹிந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன். இவர் மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு போலி துப்பாக்கியை கைகளில் ஏந்திய படி வந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறுகையில், தான் இந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனத் தலைவராக இருந்து வருகின்றேன். கடந்த 20 ஆண்டுகளாக இந்துத்துவா பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், மேலும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறையாக புகார் அளிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். இதனால் எனக்கு மதரீதியாகவும், அதேபோல பல்வேறு சமூக பிரச்சனைகளை கையில் எடுப்பதால் அவர்கள் மூலமாகவும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. எனவே தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது. எனவே தற்காத்துக் கொள்வதற்காக துப்பாக்கி வைத்துக் கொள்வதற்காக அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக வந்துள்ளதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து போலீசார் அவரை மனு அளிப்பதற்கு அனுமதி அளித்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த லோட்டஸ் மணிகண்டன் துப்பாக்கி லைசென்ஸ் வேண்டி தனது கோரிக்கை மனுவை அழித்துவிட்டு சென்றார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீஸ் துப்பாக்கியுடன் லோட்டஸ் மணிகண்டன் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.