தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கபடி போட்டியில் காயமடைந்த 8 பேர் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள (வேலம்மாள்) தனியார் மருத்துவமனையில் மருத்துவ விபத்து காப்பீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களைப் பார்த்து ஆறுதல் தெரிவிப்பதற்காக கபடி வீராங்கனை சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா மற்றும் அபினேஷ் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க தலைவர் சோலை ராஜா மற்றும் வேலம்மாள் மருத்துவமனை முதன்மை நிர்வாக அதிகாரி மணிவண்ணன் மாமன்ற உறுப்பினர் துரைப் பாண்டி, சவ்வாஸ் உசேன், ஆறுமுகம் ,ராமன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;-

மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையுடன் மருத்துவ காப்பீடு இதுவரைக்கும் 66 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ சேவைகள் ஏராளமாக செய்து இருந்தாலும் தற்போது கபடி விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ சேவையில் முதல் இடத்தில் உள்ளது
இது விளையாட்டு வீரர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நல்ல விஷயம்.
அரசு தரப்பில் இருந்து மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுக்கப்படுகிறது.
பெண்கள் ஆண்கள் என நான் பிரித்து பார்க்கவில்லை என்னிடமும் யாரும் அப்படி பார்க்கவில்லை.,என்னை எல்லோரும் ரத்த சொந்தங்களாக தான் பார்க்கிறார்கள் அவரது குழந்தை போல் தான் பார்க்கிறார்கள்.

கபடி வீரர்களுக்கு இலக்குமும், ஒழுக்கம் தான் முக்கியம் அது இரண்டும் இருந்தால் நம்மளுக்கு உதவ நிறைய பேர் இருக்கிறார்கள்.
கபடி போட்டி தேசிய அளவில் விளையாடப்பட்டு வருகிறது ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான முயற்சியும் செய்யப்பட்டு வருகிறது இதுவே அரசியல் பெரிய முயற்சி.

பீகாரில் அதிகாரிகள் அவர்கள் ஜெயிக்க வேண்டும் என பாயிண்ட்ஸ் மாத்தி கொடுத்தார்கள்., ஆனால் வீரர்கள் இலக்கை நோக்கி மட்டும் விளையாட்டால் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும்.
கிரிக்கெட்டில் பெண் வீராங்கனைகளும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தமிழ்நாட்டிற்காக 11 முறை விளையாடி எட்டு முறை பதக்கங்கள் வங்கி தந்துள்ளேன் என கபடி வீராங்கனை கார்த்திகா கூறினார்.






; ?>)
; ?>)
; ?>)
