பாப்பாக்குடி ஒன்றியம் அமர்நாத் காலனியை சார்ந்த பெற்றோரை இழந்து தன் வயது முதிர்ந்த பாட்டியிடம் வளர்ந்து வரும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி சித்ராவுக்கு படிப்பை தொடர கல்வி உதவித் தொகை கேட்டு முதல்வரின் தனி பிரிவுக்கு மனு அளித்திருந்தாள்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு காத்திருக்கும் நிலையில் உள்ளது என்றனர். அமர்நாத் காலனி கொடியேற்று விழாவுக்கு வருகை தந்த தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் கழகச் செயலாளர் பொ. சிவ பத்மநாதன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். அதிகாரிகளும் வரும் ஜனவரி மாதம் முதல் சிறுமி சித்ராவுக்கு ரூபாய் 2000 கல்வி உதவித்தொகை மாதம் வழங்குவதாக உறுதி அளித்தனர்.
மேலும் சிவபத்மநாதன் அவர்கள் ரூ.5000 வழங்கி சிறுமி சித்ராவின் கல்வி தொடர வழிவகை செய்த முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.