மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள மூலக்கரை மூட்டா காலனி அருகே தெங்கால் கம்மாய் வாய்க்கால் செல்கிறது. இதில் ஒரு பிரேதம் மிதந்து கொண்டு இருப்பதாக திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வரவே சம்பவ இடத்துக்கு விருந்த திருப்பரங்குன்றம் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மிதந்து கொண்டு இருந்த பிரேதத்தை மீட்டு திருப்பரங்குன்றம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். பின் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் பற்றி விசாரணை செய்த பொழுது அவர் தென்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் வெங்கடேஷ் வயது 40 என தெரிய வந்தது இவர் அளவு கடன் தொல்லையில் இருந்து வந்ததாகவும், நேற்று காலை தன் மனைவியிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றது தெரியவந்தது. பின் இவர் அதிக அளவு மது அருந்தி அதில் நிலை தடுமாறி கீழே விழுந்தாரா அல்லது விஷமருந்து தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் பொதுமக்கள் செல்லும் பாதையில் பிரேதம் ஒன்று மிதந்து வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.