• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பழனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் இறுதி கட்டம்…

ByNS.Deva Darshan

Sep 4, 2024

பழனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் சிங்கம் , புலி,பசு ,மயில் மேல் அமர்ந்துள்ளது போலவும், சத்ரபதி சிவாஜி உருவத்தில் உள்ள சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் 7 ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பழனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் செப்டம்பர் 13, 14ஆம் தேதியில் இரண்டு நாட்கள் ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி,இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் விநாயகர் சிலைகளை இறுதி கட்டமாக வர்ணம் பூசும் மணிகள் நடைபெற்று வருகிறது. கண்ணைக் கவரும் விதமாக பல வண்ணங்களில் விநாயகர் பெருமான் புலி, சிங்கம் , மயில், பசு மீது அமர்ந்திருப்பதை போலவும், சத்ரபதி சிவாஜி உருவத்தில் உள்ளிட்ட சிலைகள் 2 1/2 அடி முதல் 11 அடி அளவில் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதன் இறுதிக் கட்டமாக வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது.