சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் இருந்து திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க முன்னுதித்த தங்கை அம்மன் புறப்பட்ட நிகழ்வு இன்று காலை தொடங்கியது.


திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்திலிருந்து இன்றுவரை வரை தொடரும் ஒரு பாரம்பரிய நடைபயண யாத்திரை இன்று (செப்டம்பர் 30)ம் தேதி காலை 7.30_க்கு சுசீந்திரத்திலிருந்து முன்னுதித்த தங்கை அம்மன் முதல் நாள் நிகழ்வு நடைபயணம்
திருவனந்தபுரம் நோக்கி புறப்படும் முதல் நிகழ்வாக. சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் ரத வீதியை வலம் வந்து பயப்பட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முன்னுதித்த தங்கை அம்மனை திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கும் நவராத்திரி விழாவிற்கு வழி அனுப்பி வைத்தனர்.

சுசீந்திரத்தில் நடைபெற்ற நிகழ்வில். கன்னியாகுமரி மாவட்டம் அறங்காவலர்கள் குழுவின் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
