நெல்லையில் நாடாளுமன்ற வேட்பாளர் உட்பட பல காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகம் கூட்டத்திற்கு பின் திமுக, காங்கிரஸ் 39 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையிலும். தமிழக காங்கிரஸ் சார்பில் பெரிய அளவில் வெற்றி விழா கூட்டங்கள் நடைபெறவில்லை.

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் அங்கொன்று,இங்கொன்று என சில மாவட்டங்களில். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெரும்தகை பங்கேற்ற நிகழ்சிகள் மட்டுமே நடைபெற்றது.
இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் தோல் உரித்து காட்டிய பாஜகவின் ஓட்டு திருட்டு பற்றிய ஆதாரங்கள் உடன் மற்ற வைத்துள்ள ‘தீ’ இந்தியா முழுவதும் பற்றி எரிகிறது.

பீஹாரில் ராகுல் காந்தி நடத்தி வரும் பாஜகவின் திருட்டு ஓட்டு கண்டனம் மற்றும் தேர்தல் ஆணையம் பாஜகவின் ஆணையமாக மாறியது குறித்து நடத்தும் தொடர் கண்டன ஊர்வலம் பற்றிய பார்வை இந்தியாவை கடந்து உலகமே உற்று பார்க்கவைத்துவிட்ட நிலையில்.
தமிழகத்தில் பாஜகவின் ஓட்டு திருட்டு குறித்து ஒரு வலிமையான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் வகையில் ஒரு பிரமாண்டமான பாஜக எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில்.
திருநெல்வேலியில் செப்டம்பர் 7-ம் நாள் மாலை நெல்லையில் நடைபெறும் மாநாட்டின் முதல் நிகழ்வாக. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெரும்தகை, நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் பூரூஸ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், குமரி கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார்,நெல்லை மாவட்ட காங்கிரஸ் பொருப்பாளர்கள்,
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ரூபி மனோகரன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர்
தாரகை கத்பட், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற்றது.

நெல்லை மாநாட்டில் அகில இந்திய தலைவர்களுடன், இதுவரை தென்மாவட்டங்களுகு வருகை தராத பிரியங்கா காந்தி பங்கேற்பார் என்ற அதிகார பூர்வமாக அறிவிப்பு இன்னும் வராத நிலையில்.
பிரியங்கா காந்தியை பங்கேற்க செய்யும் முயற்சியை தமிழக காங்கிரஸ் தலைமை முயன்று வருவதாக ஒற்றை தகவலும் நெல்லை மாநாட்டு செய்தியுடன் சேர்ந்தே பரவிவருகிறது.

நெல்லை மாநாட்டில் பிரியங்கா காந்தி பங்கேற்றால் கட்சியை கடந்த பொதுமக்கள் ஏராளமான பார்வையாளர்களை ஈர்ப்பது மட்டுமே அல்ல. 2026_ சட்டமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு கூடுதல் வாக்குகளை பெறவும் உதவியாக இருக்கும்.













; ?>)
; ?>)
; ?>)