• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கொரோனாவால் பாதிக்கப்பட்டால் இரும்பு பெட்டிகளில் அடைக்கும் சீன அரசு?

கொரோனா தொற்று இல்லாத நாடு என்ற இலக்கை நோக்கி சீனா நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக சீனாவில் ஒரு கொரோனா நோயாளி கண்டறியப்பட்டாலும், அவர்களை தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் கட்டாயப்படுத்தி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனராம். அடுத்த மாதம் சீனா குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த உள்ளது. இந்நிலையில் ஜீரோ கோவிட் என்ற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களை இரும்பு கன்டெய்னர்களில் அடைத்துள்ளதாகவும் சில தகவல்கள் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான தகவல்களை சீனா உறுதிசெய்யவோ மறுக்கவோ இல்லை. சிறிய பெட்டி போன்ற இரும்பிலான ஒரு இடம். அதில் மரத்திலான கட்டில், ஒரு கழிவறை. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் இது அடைத்துவிடுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் என எந்தவித பாரபட்சமும் இன்றி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 15 நாட்கள் வரை வலுக்கட்டாயமாக தங்கவைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சீனாவில் ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர பயந்து வீடுகளுக்கும் அடைந்து கிடக்கின்றனர். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானதையொட்டி, சீனாவின் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.