• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

திருச்செங்கோட்டில் ஐந்து கட்டங்களாக நடந்த மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நிறைவு

ByNamakkal Anjaneyar

Dec 28, 2023

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஐந்து கட்டங்களாக நடந்த மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி இன்று நிறைவு 15 துறைகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. ஐந்தாம் கட்ட முகாமை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் தொடங்கி வைத்து உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு உரிய உத்தரவு நகல்களை வழங்கினர்.

பொதுமக்கள் தங்களது வழக்கமான கோரிக்கைகள் அல்லாமல் தனிப்பட்ட முறையிலான கோரிக்கைகளை அதிகாலைகளை தேடிச் செல்லாமல் அதிகாரிகள் மக்கள் இருக்கும் இடங்களை தேடிச் சென்று பயன் பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளும் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஐந்து கட்டங்களாக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்தப்பட்டது. இதில் வருவாய்த்துறை நகராட்சி வீட்டு வசதிமற்றும் நகர்ப்புறத்துறைமின்சாரத்துறை மாற்றுத்திறனாளிகள் துறை காவல் துறை தொழிலாளர் நலத்துறை சமூக நலத்துறை கூட்டுறவுத்துறை தாட்கோ பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பீடு திட்டம் மாவட்ட தொழில் மையம் வேலைவாய்ப்பு துறை ஆதிதிராவிடர் நலத்துறை என பதினைந்துக்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் திருச்செங்கோடு நகர்புற பகுதிக்கு வந்து பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றனர். நேற்று வரை 1764 மனுக்கள் வந்திருந்த நிலையில், ஐந்தாம் நாள் இறுதிக்கட்ட முகாம் வேலூர் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடந்தது முகாமை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் மண்டல நகர அமைப்பு திட்டகுழு உறுப்பினர் மதுரா செந்தில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இன்று சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்கான மனுக்களை வழங்கினார்கள். உடனடியாக தீர்வு காணக்கூடிய மனுக்கள் கண்டறியப்பட்டு, உடனடியாக உத்தரவு நகல்கள் வழங்கப்பட்டது. இதனை எம்எல்ஏ ஈஸ்வரன் மதுரா செந்தில் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் பொதுமக்களிடம் வழங்கினார்கள்.