• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கோலாகலமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா!..

Byகுமார்

Jan 14, 2022

ஜல்லிகட்டு போட்டியை அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்பு. மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லாத சான்றிதழ் கட்டாயம். போட்டி தொடங்கும் முன்பாகவே அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே களத்திற்குள் அனுமதிக்கப்படுவர். போட்டியில் கலந்து கொள்ள கூடிய காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான அனுமதிசீட்டுடன் ஒரு உதவியாளர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கபடவுள்ளனர் .காளை வெளியேறகூடிய வாடிவாசல் பகுதிக்கு முன்பாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதுகாப்பு கருதி தென்னை நார்கள் பரப்பிவிடப்பட்டுள்ளன

போட்டி நடைபெறும் பகுதியில் இருபுறமும் 8 அடி உயரத்திற்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.போட்டி முழுவதும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடைபெறுகிறது.


அவனியாபுரம் பகுதியில் 20 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.ஒட்டுமொத்தமாக 2 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கண்காணிப்பு கேமிராக்கள் வழியே கண்காணிப்பு
அவசரகால மருத்துவ தேவைக்காக 10 மருத்துவக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு சுற்றிலும் தலா 30 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவர், ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெறும். போட்டியானது காலை 8மணிக்கு தொடங்கி மாலை 3மணிவரை நடைபெறவுள்ளது.


சிறந்த காளைக்கு கார் முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பிலும், சிறந்த மாடுபிடி வீரருக்கு பைக் சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி சார்பிலும் வழங்கப்படவுள்ளது தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர் ,குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன இந்த நிலையில் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்தனர் ஜல்லிக்கட்டு போட்டி அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி பி ராஜன் செல்லப்பா ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி ஆர் ராஜசேகரன் தற்போது வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.