நாகர்கோவிலில் உள்ள புனித அல்போன்சா திருத்தலத்தின்
10_ம் திருவிழாவின் பிற்பகல் நிகழ்வான திரு சப்பரம் பவனியில் ஏராளமான அருட்பணியாளர்கள், அருட் கன்னியர்கள், இறைமக்கள்,இவர்களுடன் பிற சகோதர மதங்களைச் சேர்ந்த மக்களும் மத பேதமின்றி அனைவரும் புனித அல்போன்சா வின் சன்னதியில் ஒரே மக்கள் சமூகமாய் பங்கேற்பது ஆண்டுகள் தோறும் தொடரும் ஒரு வரலாற்று நிகழ்வு. சப்பரபவனியின் தொடக்கத்தை உணர்த்தும் ஆலய மணி அடித்ததும். புனித அல்போன்சா ஆலயம் வளாகத்தில் கூடியிருந்த இறை மக்கள் அனைவரும் புனித அல்போன்சா வின் அருள் கருணை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

தக்கலை மறைமாவட்ட ஆயர் பேரருள் இராஜேந்திரன். திருப்பலியில் போது ஆற்றிய பிரசங்கத்தில் புனித அல்போன்சா ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர்,இவரது 2_வயதிற்குள்ளாகவே பெற்ற அன்னை மரணம் அடைந்த நிலையில், பெரியம்மாவின் அரவணைப்பில், அன்பில் வளர்ந்தவர்.
அவரது 5_வது வயதில் கல்வி கற்க ஆரம்ப பள்ளியில் சேர்ந்தார். 2_ம் வகுப்பு பயிலும் போது. கிறிஸ்தவ மதச்சடங்கில் ஒன்றான திருவிருந்தை உட்க்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றதையும், இந்த பூமியில் 35_ஆண்டுகளே வாழ்ந்தவர். அவர் வாழ்நாளில் இறை இயேசுவின் அருள் பெற்ற அருள் கன்னியாக வாழ்ந்து 1946_ம் ஆண்டு ஜூலை திங்கள் 28_ம் நாள் மறைந்தார்.

புனித அல்போன்சா அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் தினம், தினம் ஆயிரக்கணக்கான பல் சமூக மக்கள் வணங்கி அவர்களின் வேண்டுதல்களை பெற்றதை, இன்றும் பெற்று வரும் நிலையில்,
கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் போப்பாண்டவரால் 2011_ம் ஆண்டு அல்போன்சாவுக்கு புனிதர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது என்பதை திருப்பலியில் மறை உறையில் தெரிவித்தார். தக்கலை மறைமாவட்ட பேரருள்ஆயர் இராஜேந்திரன்.