அம்மா ஜெயலலிதா மறைந்தும் மறையாமலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் முன்னாள்முதல் அமைச்சர் அம்மா ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவுதினமான டிசம்பர் _5 ம் தேதியில் அம்மாவின் நினைவு நாளை அனுசரிக்கும் வகையில்.

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க, சார்பில். நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள, மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் காலை அம்மாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர, பேரூர், கிளை கழக செயலாளர்கள்,அணி அமைப்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும். இது மட்டும் அல்லாது ஒன்றிய நகர பகுதிகளிலும்
அம்மாவின் படத்தை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என தளவாய் சுந்தரம் அவரது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.








